துருக்கியில் பொது இடங்களில் புகை பிடிக்கத் தடை
கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக பொது இடங்களில் புகைப்பிடிக்கத் தடை விதித்து துருக்கி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக பொது இடங்களில் புகைப்பிடிக்கத் தடை விதித்து துருக்கி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
உலக நாடுகளும் பலவும் கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து செயல்படுத்தி வருகின்றன.
இந்நிலையில் துருக்கியில் நாளுக்குநாள் அதிகரித்து வரும் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி பொதுஇடங்களில் புகைப்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. புகைப்பிடிப்பவர்கள் முகக்கவசங்களை பயன்படுத்துவதில்லை என்பதால் இந்த தடை விதிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே மாதத்தின் பிற்பகுதியில் பொதுமுடக்கத்தை தளர்த்தியதன் மூலம் கரோனா தொற்றுநோய் பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்தது. துருக்கியில் இதுவரை கரோனா தொற்றால் 11 ஆயிரத்து 145 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.