முகப்பு
உலகம்

ஆப்கனில் தலிபான்கள் தாக்குதல்: 7 பேர் பலி

ஆப்கனில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 7 பேர் பலியானார்கள். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:54 PM
கோப்புப் படம்.
பகிர்:

ஆப்கனில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 7 பேர் பலியானார்கள். 

ஆப்கானிஸ்தான், குண்டூஸ் நகரின் தலோகா பகுதியில் உள்ள வீடுகள் மீது மோட்டார் குண்டுகளை வீசித் தலிபான்கள் நேற்று மாலை தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில் பெண், குழந்தை என மொத்தம் 7 பேர் பலியானார்கள். மேலும் 6 பேர் காயமடைந்தனர். 

எனினும் இந்த தாக்குதல் குறித்து தலிபான்கள் இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை. அமைதிப் பேச்சுவார்த்தை ஒரு பக்கம் நடைபெற்று வந்தாலும் வந்தாலும் தலிபான் பயங்கரவாதிகள் ஆப்கனில் தங்கள் தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.