முகப்பு
உலகம்

பிரேசிலில் ஒரேநாளில் 38,397 பேருக்குத் தொற்று: 60 லட்சத்தைத் தாண்டிய பாதிப்பு 

பிரேசிலில் கரோனா பாதிப்பு 60 லட்சத்தைக் கடந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது. 

Updated On : 21 நவம்பர், 2020 at 12:35 PM
Brazil's Covid-19 tally surpasses 6 million
பகிர்:

பிரேசிலில் கரோனா பாதிப்பு 60 லட்சத்தைக் கடந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது. 

உலகளவில் கரோனா அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் 3ஆம் இடத்தில் பிரேசில் உள்ளது. பிரேசிலில் கரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில் சமீபமாக மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. 

இந்நிலையில் நவம்பர் 21-ம் தேதி நிலவரப்படி அந்நாட்டு சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளதாவது: 

Advertisement

பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 38,397 பேருக்குத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 552 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால் நாட்டில் கரோனா பாதிப்பு 60 லட்சத்தைக் கடந்துள்ளது. இன்றைய நிலவரப்படி, 60,20,164 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த உயிரிழப்பு 1,68,613 ஆக உள்ளது. அதேநேரத்தில் 54,22,102 பேர் குணமடைந்துள்ளனர். 

மேலும் 4,29,400 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், 8,318 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.