இலங்கையில் மீண்டும் கரோனா பரவல்: 81 பேருக்கு பாதிப்பு
இலங்கையில் புதிதாக 81 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இலங்கையில் புதிதாக 81 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா அண்டை நாடான இலங்கையும் விட்டுவைக்கவில்லை. எனினும், அந்நாட்டுஅரசு மேற்கொண்ட தீவிர முயற்சியால் வைரஸ் பரவல் ஆரம்ப நிலையிலேயே கட்டுப்படுத்தப்பட்டது. இதையத்தொடர்ந்து அங்கு கடந்த ஜூன் 28 ஆம் தேதி கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்பட்டன. மேலும் பள்ளி, கல்லூரிகளும் திறக்கப்பட்டன.
இந்த நிலையில் இலங்கையில் கரோனா வைரஸ் தற்போது மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. மினுவங்கொடவில் உள்ள ஆடை தொழிற்சாலையில் பணியாற்றிய 81 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,483ஆக உயர்ந்துள்ளது. கரோனாவுக்கு இதுவரை 13 பேர் பலியாகியுள்ளனர்.
Advertisement
அதேசமயம், நாட்டில் இதுவரை மொத்தம் 2,96,600 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வைரஸ் பரவலைத்தொடர்ந்து இலங்கை தலைநகர் கொழும்புவின் புறநகர் பகுதிகளான திவுலப்பிட்டிய மற்றும் மினுவங்கொட ஆகிய இடங்களில் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.