முகப்பு
உலகம்

தலிபான் தாக்குதலில் 11 ஆப்கானிய பாதுகாப்புப் படை வீரர்கள் பலி

ஆப்கானிஸ்தானில் வியாழக்கிழமை தலிபான்கள் நடத்திய திடீர் தாக்குதலில் 11 ஆப்கானிய பாதுகாப்புப் படை வீரர்கள் பலியாகியுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:35 PM
தலிபான் தாக்குதலில் 11 ஆப்கானிய பாதுகாப்புப் படை வீரர்கள் பலி
பகிர்:

ஆப்கானிஸ்தானில் வியாழக்கிழமை தலிபான்கள் நடத்திய திடீர் தாக்குதலில் 11 ஆப்கானிய பாதுகாப்புப் படை வீரர்கள் பலியாகியுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் அரசுக்கும், தலிபான் அமைப்புகளுக்கும் இடையில் அடிக்கடி மோதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வியாழக்கிழமை குண்டுஸ் மற்றும் ஹெல்மண்ட் மாகாணங்களில் தலிபான்கள் தாக்குதல் நடத்தினர்.

அலி அபாத் மாவட்டத்தில் உள்ள பாதுகாப்பு மையத்தில் தலிபான் நடத்திய தாக்குதலில் நான்கு பாதுகாப்புப் படை வீரர்கள் தலிபான்களால் பிணைக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ளதாக தலிபான்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.