முகப்பு
உலகம்

உலக அளவில் கரோனா பாதிப்பு 3.83 கோடியாக உயர்வு

உலக அளவில் கரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 83 லட்சத்தை கடந்துள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

Updated On : 14 அக்டோபர், 2020 at 9:17 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:07 PM


வாஷிங்டன்: உலக அளவில் கரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 83 லட்சத்தை கடந்துள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

உலகம் முழுவதும் 214  நாடுகளுக்கு கரோனா நோய்த்தொற்று பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 83 லட்சத்து 61 ஆயிரத்து 289 ஆக உயர்ந்துள்ளது , அதே நேரத்தில் 2,88,46,861 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். 

உலக முழுவதும் இதுவரை 10,90,811 பேர் தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 

Advertisement

தொற்று பாதித்தவர்களில் அதிகயளவில் குணமடைந்தவர்களின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. நாடு முழுவதும் இதுவரை 62,98,705 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 
    
தொற்று பாதிப்பு மற்றும் உயிரிழப்புகள் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. அங்கு இதுவரை 80,90,253 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 2,20,873 பேர் உயிரிழந்துள்ளனர். 

நோய்த்தொற்று பாதிப்பில்  இந்தியா மற்றும் பிரேசில் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது  இடங்களில் உள்ளது. இந்தியாவில் 72,37,082 பேரும், பிரேசிலில் 51,14,823  பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு பட்டியலில் பிரேசில் 1,51,063 உயிரிழப்புகளுடன் இரண்டாவது இடத்திலும்,  இந்தியா 1,10,617 உயிரிழப்புகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. 

கரோனா நோய்த்தொற்று பாதிப்பு மற்றும் உயிரிழப்புக்கு மோசமான நாடுகளின் பட்டியலில் ரஷ்யாவில் 13,26,178 பாதிப்பு மற்றும் 22,966 உயிரிழப்புகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.