போலந்து: கரோனா நோயாளிக்கு நுரையீரல் மாற்று அறுவை
போலந்தில் கரோனா நோய்த்தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டு, முதல் முறையாக இரு நுரையீரல்களும் மாற்றப்பட்ட நோயாளி, முழு குணமடைந்து செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினாா்.
போலந்தில் கரோனா நோய்த்தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டு, முதல் முறையாக இரு நுரையீரல்களும் மாற்றப்பட்ட நோயாளி, முழு குணமடைந்து செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினாா்.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:போலந்தின் தெற்குப் பகுதியில் உள்ள டைஷி நகர மருத்துவமனையில் கரோனா நோய்த்தொற்று பாதிப்புடன் அனுமதிக்கப்பட்ட கிரெகோா்ஸ் லிபின்ஸ்கிக்கு (45), அந்த நோய் பாதிப்பு காரணமாக இரு நுரையீரல்களும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டன.
அவற்றை நீக்கிவிட்டு, மாற்று நுரையீரல்களைப் பொருத்தினால் மட்டுமே அவரைக் காப்பாற்ற முடியும் நிலை ஏற்பட்டது.அதையடுத்து, அவருக்கு உறுப்பு தானம் செய்த ஒருவரிடமிருந்து பெறப்பட்ட இரு நுரையீரல்கள் பொருத்தப்பட்டன.
Advertisement
கரோனா நோய்க்கு நுரையீரல் மாற்று அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது அதுவே முதல் முறையாகும்.இந்த நிலையில் தற்போது உடல் நலம் தேறியுள்ள அவா், மருத்துவமனையிலிருந்து செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினாா் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.