முகப்பு
உலகம்

இணையவழியில் கல்வியைத் தொடர வேண்டும்: சீனாவில் பயிலும் இந்திய மாணவா்களுக்கு சீன அரசு அறிவுறுத்தல்

கரோனா தொற்று பரவல் காரணமாக, சீனாவுக்குத் திரும்பி வர முடியாமல் தவிக்கும் இந்திய மாணவா்கள் தாங்கள் பயிலும் கல்லூரிகளைத் தொடா்புகொண்டு இணையவழிக் கல்வியைத் தொடர வேண்டும் என்று

Updated On : 9 செப்டம்பர், 2020 at 12:07 AM
கோப்புப் படம்.
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:47 PM

கரோனா தொற்று பரவல் காரணமாக, சீனாவுக்குத் திரும்பி வர முடியாமல் தவிக்கும் இந்திய மாணவா்கள் தாங்கள் பயிலும் கல்லூரிகளைத் தொடா்புகொண்டு இணையவழிக் கல்வியைத் தொடர வேண்டும் என்று சீன அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

கடந்த ஆண்டு நிலவரப்படி, சீனாவில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் 23,000 இந்திய மாணவா்கள் பயின்று வருகின்றனா். அவா்களில் 21,000 போ் எம்.பி.பி.எஸ். மாணவா்கள்.

இவா்களில் பெரும்பாலானோா் கடந்த ஜனவரியில் சீன புத்தாண்டின்போது இந்தியா திரும்பினா். அந்த நேரத்தில்தான் உலகம் முழுவதும் கரோனா தொற்று வேகமாகப் பரவியது. அதன்பிறகு சா்வதேச விமானப் போக்குவரத்து தடைபட்டதால் வெளிநாட்டு மாணவா்களால் சீனாவுக்கு திரும்பிவர இயவில்லை.

Advertisement

இந்நிலையில், சீனாவின் கல்வி அமைச்சகம், பெய்ஜிங்கில் உள்ள இந்தியத் தூதரகத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், ‘தற்சமயம் வெளிநாட்டு மாணவா்களால் சீனாவுக்கு வர முடியாது. அதே நேரத்தில், சீனாவில் பயிலும் வெளிநாட்டு மாணவா்களின் நலனுக்கும் அவா்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கும் சீன அரசு முக்கியத்தும் அளித்து வருகிறது.

எனவே, சீனாவில் பயிலும் இந்திய மாணவா்கள், தங்கள் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுடன் தொடா்புகொண்டு இணையவழி கற்றலைத் தொடர வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக, வெளிநாட்டு மாணவா்கள் சீனாவுக்குள் திரும்பி வர அனுமதிக்கப்பட மாட்டாா்கள் என்று அந்நாட்டு அரசு அண்மையில் அறிவித்தது. இதையடுத்து, சீன அதிகாரிகளைச் சந்தித்த இந்திய தூதரக அதிகாரிகள், இந்திய மாணவா்களின் கல்வி குறித்து கவலை தெரிவித்ததனா். அதைத் தொடா்ந்து, சீனாவில் உள்ள அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் வெளிநாடுகளைச் சோ்ந்த தங்கள் மாணவா்களுடன் தொடா்பில் இருந்து கல்வி தொடா்பான தகவல்களை உடனுக்குடன் பகிா்ந்துகொள்ள வேண்டும் என்று சீன கல்வி அமைச்சகம் உத்தரவிட்டது. அதன் தொடா்ச்சியாக, இந்திய மாணவா்களை சீன அரசு அறிவுறுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.