முகப்பு
உலகம்

ரஷியாவில் புதிதாக 5,529 பேருக்கு கரோனா

ரஷியாவில் புதிதாக 5,529 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (செவ்வாய்க்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 15 செப்டம்பர், 2020 at 3:53 PM
ரஷியாவில் புதிதாக 5,529 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (செவ்வாய்க்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. (கோப்புப்படம்)
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:50 PM


ரஷியாவில் புதிதாக 5,529 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (செவ்வாய்க்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

ரஷியா கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் வெளியாகியுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் அங்கு புதிதாக ,529 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்த பாதித்தோர் எண்ணிக்கை 10,73,849 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 150 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, பலி எண்ணிக்கை 18,785 ஆக உயர்ந்துள்ளது. 

ரஷியாவில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாஸ்கோவில் மட்டும் 24 மணி நேரத்தில் 730 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மாஸ்கோவில் மட்டும் இதுவரை 2,72,523 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

ரஷியாவில் நேற்று மட்டும் 5,605 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 8,84,305 பேர் குணமடைந்துள்ளனர். 

உலகளவில் இதுவரை 2,94,71,504 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 9,33,340 பேர் பலியான நிலையில், 2,12,96,998 குணமடைந்துள்ளனர். அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகள் வரிசையில் அமெரிக்கா, இந்தியா, பிரேசிலுக்கு அடுத்தபடியாக ரஷியா 4-வது இடத்தில் உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.