முகப்பு
உலகம்

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 2,964 பேருக்கு கரோனா பாதிப்பு

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,964 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை  72,460 ஆக அதிகரித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:43 PM
பகிர்:

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,964 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை  72,460 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து அந்நாட்டின் தேசிய சுகாதார அமைப்பு இன்று வெளியிட்டுள்ள தகவலில் கூறியுள்ளதாவது:

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,964 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. மேலும், 60 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 72,460 ஆக அதிகரித்துள்ளது. அதேபோன்று உயிரிழப்பு 1,543 ஆக உயர்ந்துள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று இதுவரை 26,083 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

நேற்று மட்டும் 14,398 பரிசோதனைகள் உள்பட இதுவரை 5,61,136 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மொத்த பாதிப்பில் பஞ்சாபில் 26,240, சிந்து - 28,245, கைபர்-பக்துன்க்வா- 10,027, பலுசிஸ்தான்- 4,393, இஸ்லாமாபாத் - 2,589, கில்கித்-பல்திஸ்தான்- 711 மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 255 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →