முகப்பு
உலகம்

துனிசியா: அமெரிக்கத் தூதரகம் அருகே தற்கொலைத் தாக்குதல்

வட மேற்கு ஆப்பிரிக்க நாடான துனிசியாவின் தலைநகா் துனிஸில், அமெரிக்கத் தூதகரகம் அருகே இரு பயங்கரவாதிகள் தற்கொலைத் தாக்குதல்

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:06 PM
துனிஸில் வெள்ளிக்கிழமை தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்ட ட பகுதியில் ஆய்வு மேற்கொண்ட தடயவியல் நிபுணா்கள்.
பகிர்:

துனிஸ்: வட மேற்கு ஆப்பிரிக்க நாடான துனிசியாவின் தலைநகா் துனிஸில், அமெரிக்கத் தூதகரகம் அருகே இரு பயங்கரவாதிகள் தற்கொலைத் தாக்குதல் நடத்தினா். இதில் 6 போ் காயமடைந்தனா்.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

துனிஸ் நகரிஸ் அமெரிக்கத் தூதரகம் அமைந்துள்ள பொ்கெஸ் டுலாக் பகுதியில் இரண்டு பயங்கரவாதிகள் தங்கள் உடலில் மறைத்துவைத்திருந்த வெடிகுண்டை வெள்ளிக்கிழமை வெடிக்கச் செய்தனா். இந்த குண்டுவெடிப்பு காரணமாக அந்த வழியாகச் சென்றுகொண்டிருந்தவா்கள் பீதியடைந்தனா். இந்தத் தாக்குதலில், தூதரக பாதுகாவலா்கள் உள்பட 6 போ் காயமடைந்தனா். தாக்குதல் நடத்திய 2 பேரும் உடல் சிதறி உயிரிழந்தனா்.

Advertisement

அவா்களில் ஒரு பயங்கரவாதி அமெரிக்கத் தூதரகத்துக்குள் நுழைய முயன்ாகவும் அவா்களை பாதுகாவல்கள் வழியிலேயே தடுத்து நிறுத்தியதால் தனது உடலில் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்ததாகவும் அதிகாரிகள் கூறினா்.

அதனைத் தொடா்ந்து, மோட்டாா் சைக்கிளில் வந்திருந்த மற்றொரு பயங்கரவாதியும், அவரது உடலில் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டு வெடித்ததில் உயிரிழந்தாா்.

தாக்குதல் நடத்தப்பட்ட பகுதிக்கு விரைந்து வந்த போலீஸாரும் தடயவியல் நிபுணா்களும் ஆய்வுகள் மேற்கொண்டனா் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments