முகப்பு
உலகம்

கரோனா தொற்றுக்காக சீனா அதிக விலை கொடுக்க நேரிடும்: டொனால்ட் டிரம்ப்

கரோனா நோய்த்தொற்றை உருவாக்கி அமெரிக்கா மற்றும் உலகத்துக்கு பேரழிவை ஏற்படுத்தியதற்காக சீனா அதிக விலையை கொடுக்க நேரிடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Updated On : 8 அக்டோபர், 2020 at 9:34 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:04 PM



வாஷிங்டன்: கரோனா நோய்த்தொற்றை உருவாக்கி அமெரிக்கா மற்றும் உலகத்துக்கு பேரழிவை ஏற்படுத்தியதற்காக சீனா அதிக விலையை கொடுக்க நேரிடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

கரோனா நோய்த்தொற்றை உருவாக்கி பரவவிட்டது சீனா தான் என்று குற்றம்சாட்டிய டிரம்ப், அவர்கள் உலகத்திற்காக செய்த இந்த காரியத்திற்காக அதிக விலையை கொடுக்க நேரிடும். 

மேலும், எனக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது 'கடவுளிமிருந்து வந்த ஆசீர்வாதம்' என்று டிரம்ப் கூறியுள்ளார். ஏனெனில் கரோனாவுக்கான மருந்து கண்டுபிடிப்பதன் அவசியத்தை கடவுள் கற்றுக்கொடுத்துள்ளார். 

Advertisement

தனக்கு கிடைத்த கரோனா தொற்றுக்கான சிகிச்சையைப் பாராட்டிய டிரம்ப், அமெரிக்கர்களுக்கு " கரோனா மருந்துகள்(சிகிச்சை) இலவசமாக வழங்குவதாக உறுதியளித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.