ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 13,592 பேருக்கு கரோனா
ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 13,592 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது. மேலும், 125 பேர் கரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.
ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 13,592 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது. மேலும், 125 பேர் கரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.
ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கரோனா பாதிப்பு விவரங்களை அந்நாட்டு சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, நாட்டில் புதிதாக 13,592 பேருக்கு தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது.
இதையடுத்து, மொத்த பாதிப்பு 13,12,310 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 125 பேர் உள்பட இதுவரை 22,722 பேர் உயிரிழந்துள்ளனர்.
Advertisement
அதேநேரத்தில் தற்போதுவரை 10,24,235 பேர் முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,793 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், இன்றைய நிலவரப்படி 2,65,353 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று பாதித்தோரில் தலைநகர் மாஸ்கோவில் புதிதாக 4,395 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலக அளவில் கரோனா வைரஸ் தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா, பிரேசில், இந்தியாவைத் தொடர்ந்து ரஷியா 4 ஆம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.