முகப்பு
உலகம்

அமெரிக்காவின் ரசாயன சேமிப்புக் கிடங்கில் பெரும் தீ விபத்து

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ஹூஸ்டன் நகரில் உள்ள ஒரு ரசாயன சேமிப்புக் கிடங்கில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:57 PM
அமெரிக்காவின் ரசாயன சேமிப்புக் கிடங்கில் பெரும் தீ விபத்து
பகிர்:

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ஹூஸ்டன் நகரில் உள்ள ஒரு ரசாயன சேமிப்புக் கிடங்கில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

உள்ளூர் நேரப்படி புதன்கிழமை இரவு 7 மணியளவில் ஏற்பட்ட இந்த தீ விபத்தினால் அங்கு பல கிலோமீட்டர் தூரத்திற்கு கரும்புகை சூழ்ந்துள்ளது. 

சேமிப்புக்கிடங்கில் ரசாயனத்தை ஒரு கொள்கலனில் இருந்து மற்றொரு கொள்கலனுக்கு மாற்றும்போது இந்த தீ விபத்து ஏற்பட்டதாகக் கே-சால்வ் என்ற அந்த நிறுவனத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளார். 

கடந்த சில மணி நேரங்களாக பரவி வரும் தீயினை அணைக்க தீயணைப்புப்படை வீரர்கள் போராடி வருகின்றனர். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.