உலகம்

இந்தோனேசியாவில் கடலுக்கடியில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.0 ஆகப் பதிவு

PTI

இந்தோனேசியாவின் முக்கிய தீவான ஜாவாவில் கடலுக்கடியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.  

கிழக்கு மாகாணத்தில் உள்ள மலாங் மாவட்டத்தின் சம்பர்புகுங் நகரிலிருந்து தெற்கே 44.8 கிலோமீட்டர் (27.8 மைல்) மையத்தில் 82 கிலோ மீட்டர் (50.9 மைல்) ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. இது ரிக்டர் அளவில் 6.0 ஆகப் பதிவாகியுள்ளது. 

இந்தோனேசியாவின் பூகம்பம் மற்றும் சுனாமி மையத்தின் தலைவர் ரஹ்மத் ட்ரையோனா கூறுகையில், 

கடலுக்கடியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் சுனாமி ஏற்படும் வாய்ப்புகள் இல்லை என்று அவர் தெரிவித்தார். 

மேலும், நிலச்சரிவு ஏற்படக்கூடிய பாறைகளின் அருகில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார். ஏனெனில் மாகாணத்தின் சில பகுதிகளில் மக்கள் மிதமான நிலநடுக்கத்தை உணர்ந்ததாகச் சொல்லப்படுகிறது. 

அண்டை நகரமான மலாங்கின் பிளிட்டரில் உள்ள மருத்துவமனை ஒன்றின் மேற்கூரை சேதடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இந்தோனேசியாவில் அடிக்கடி பூகம்பங்கள், எரிமலை வெடிப்பு மற்றும் சுனாமி பாதிப்பு ஏற்படுகிறது. 

கடந்த ஜனவரியில் 6.2 ரிக்டரில் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுமார் 105 பேர் உயிரிழந்தனர். கிட்டத்தட்ட 6,500 பேர் காயமடைந்தனர். 92,000 பேர் இடம்பெயர்ந்தனர் என்பது  குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடைக்கால பயிற்சி வகுப்புக்கு கட்டணம்- எடப்பாடி பழனிசாமி கண்டனம்

சமந்தாவின் புதிய படம்!

நீல நிலவே....திவ்யா துரைசாமி!

மணிப்பூரில் இரண்டு குழுக்களுக்கிடையே மீண்டும் துப்பாக்கிச்சண்டை: கிராம மக்கள் அச்சம்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

SCROLL FOR NEXT