பிரேசிலில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒருநாளில் 3,459 பேர் பலி
பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 3,459 பேர் கரோனாவுக்குப் பலியாகியுள்ளனர். இதையடுத்து கரோனா பலி எண்ணிக்கை 3 லட்சத்து 60 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 3,459 பேர் கரோனாவுக்குப் பலியாகியுள்ளனர். இதையடுத்து கரோனா பலி எண்ணிக்கை 3 லட்சத்து 60 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 73,513 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு மொத்த பாதிப்பு 13,673,507 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், ஒரேநாளில் தொற்று பாதித்த 3,459 பேர் உயிரிழந்ததையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 361,884 ஆக அதிகரித்துள்ளது. நேற்று பலி எண்ணிக்கை 3,808 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
Advertisement
கரோனா பாதிப்பில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக பிரேசில் இரண்டாம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த சில தினங்களாக பிரேசிலில் கரோனா பலி நாள் ஒன்றுக்கு 3 ஆயிரத்தைத் தாண்டி பதிவாகி வருகிறது.
பிரேசிலில் இதுவரை 2.95 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.