இறந்த திமிங்கலத்தைத் தின்னும் சுறாக்கள்; ஹவாய் கடற்கரை மூடல்(விடியோ)
ஹவாய் கடற்கரையில் இறந்த திமிங்கலத்தை கடலில் இருக்கும் சுறாக்கள் தின்று வருவதால் அங்கு பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
உலகம்இறந்த திமிங்கலத்தைத் தின்னும் சுறாக்கள்; ஹவாய் கடற்கரை மூடல்(விடியோ)
ஹவாய் கடற்கரையில் இறந்த திமிங்கலத்தை கடலில் இருக்கும் சுறாக்கள் தின்று வருவதால் அங்கு பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
ஹவாய் கடற்கரையில் இறந்த திமிங்கலத்தை கடலில் இருக்கும் சுறாக்கள் தின்று வருவதால் அங்கு பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்தின் பீச் ஸ்டேட் பார்க்கில் திமிங்கலம் ஒன்று உயிரிழந்த நிலையில் கடலில் மிதந்துள்ளது. திமிங்கலம் கரை ஒதுங்கும் நிலையில், கடலில் இருந்த சுறாக்கள் இறந்த திமிங்கலத்தை கடலுக்குள் இழுத்து அதனை சிதைத்து தின்று வருகின்றன.
கடந்த செவ்வாய்க்கிழமை முதல் சுறாக்களின் பிடியில் இறந்த திமிங்கலம் சிக்கியுள்ளது. 12 முதல் 13 அடி நீளமுள்ள மூன்று சுறாக்கள் இருந்ததாக அங்குள்ள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும், சடலத்தை கடலுக்குள் இழுக்கலாமா அல்லது கரைக்கு கொண்டு வரலாமா என்று ஆலோசித்து வருகின்றனர். இதையடுத்து ஹவாய் கடற்கரைப் பகுதிக்கு பயணிகள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.