முகப்பு
உலகம்

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 8 பேர் பலி

அமெரிக்காவில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் பலியானார்கள்.  

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:01 PM
பகிர்:

அமெரிக்காவில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் பலியானார்கள். 
அமெரிக்காவில் இண்டியானாபோலிஸ் நகரில் உள்ள ஃபெடெக்ஸ் நிறுவனத்தில் நேற்று நுழைந்த நபர் ஒருவர் தான் வைத்திருந்திருந்த துப்பாக்கியால் அங்கிருந்தவர்களை சரமாரியாக சுட்டார். இதில் 7 பேர் பலியானார்கள். 
அதோடு துப்பாக்கிச்சூட்டை நடத்திய நபரும் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனால் இந்த சம்பவத்தில் 8 பேர் பலியானார்கள். பலர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அனைவரும் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 
அவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இச்சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதி முழுவதும் போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.