உலகம்

பாகிஸ்தானில் கரோனா பலி 24 ஆயிரத்தைக் கடந்தது!

DIN

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 86 பேர் பலியானதை அடுத்து கரோனா பலி எண்ணிக்கை 24 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. 

இதுதொடர்பாக பாகிஸ்தான் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 'பாகிஸ்தானில் கடந்த 24 மணிநேரத்தில் 49,506 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் புதிதாக 3,884 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் மொத்த பாதிப்பு 10,75,504 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்ட 84,427 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். 

புதிதாக 86 பேர் உள்பட மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 24,004 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நேற்று 2,669 பேர் உள்பட இதுவரை 9,67,073 பேர் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

பாகிஸ்தானில் அதிகபட்சமாக சிந்து மாகாணத்தில் 4,01,790 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக பஞ்சாபில் 3,65,824 பேரும், கைபர் பதுன்க்வாவில் 1,49,056 பேரும், இஸ்லாமபாத்தில் 91,217 பேரும், பலூசிஸ்தானில் 31,234 பேரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காா்கே ஹெலிகாப்டரில் சோதனை எதிா்க்கட்சிகளைத் தோ்தல் ஆணையம் குறிவைப்பதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு

மாணவ-மாணவியருக்கு பாராட்டு...

அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்ய ஆளுநா் ரவி ஒப்புதல்

இந்திய நிதியுதவித் திட்டங்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம்: மாலத்தீவு வெளியுறவு அமைச்சா்

சவீதா மருத்துவக் கல்லூரியில் மாணவா்களுக்கான உச்சி மாநாடு

SCROLL FOR NEXT