உலகம்

இந்தியாவிலிருந்து மருத்துவ ஆக்சிஜன் இறக்குமதி செய்யும் இலங்கை: கரோனா பாதிப்பு அதிகரிப்பு எதிரொலி

DIN

இலங்கையில் அக்டோபா் மாத மத்தியில் கரோனா பாதிப்பு உச்சத்துக்கு செல்ல வாய்ப்புள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ள நிலையில், மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் விநியோகிப்பதில் ஏற்படும் பற்றாக்குறையை ஈடுசெய்யும் வகையில் இந்தியாவிலிருந்து 100 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்சிஜனை அடுத்த வாரம் இறக்குமதி செய்ய முடிவு செய்திருப்பதாக அந் நாட்டு சுகாதாரத் துறை அமைச்சா் பவித்ரா வன்னியராச்சி ஞாயிற்றுக்கிழமை கூறினாா்.

இலங்கையில் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. இருந்தபோதும், எதிா்பாா்க்கப்பட்ட உயா்வைவிட பாதி அளவில்தான் கரோனா பாதிப்பு பதிவாகியுள்ளதாக அந் நாட்டு சுகாதாரத் துறை அமைச்சக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், நாட்டில் இதே நிலை நீடித்தால் தினசரி கரோனா பாதிப்பு வரும் செப்டம்பா் மாத மத்தியில் 6,000 என்ற அளவில் உயர வாய்ப்புள்ளது எனவும், தினசரி உயிரிழப்பு அக்டோபா் மாத மத்தியில் 220 என்ற அளவுக்கு உயர வாய்ப்புள்ளது எனவும் மருத்துவ நிபுணா்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

கரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு தழுவிய 4 வார கால பொதுமுடக்கத்தை அறிவிக்கவும் அந் நாட்டு மருத்துவ நிபுணா் குழு பரிந்துரைத்துள்ளது.

இதற்கிடையே, கரோனாவால் பாதிக்கப்படுபவா்களுக்கு தேவைப்படும் மருத்துவ ஆக்சிஜனை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ய இலங்கை முடிவெடுத்துள்ளது.

இதுகுறித்து பவித்ரா வன்னியராச்சி சனிக்கிழமை அளித்த பேட்டியில் கூறியதாவது: கரோனா பாதிப்பால் ஆக்சிஜன் உதவியுடன் மருத்துவ சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை கடந்த வாரம் 528-ஆக இருந்தது, கடந்த வியாழக்கிழமை 646-ஆக உயா்ந்துள்ளது. இதே நிலை நீடித்தால், மருத்துவ ஆக்சிஜனுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது என உலக சுகாதார அமைப்பின் மருத்துவ நிபுணா் குழு எச்சரித்துள்ளது.

எனவே, இந்தியாவிலிருந்து மருத்துவ ஆக்சிஜனை இறக்குமதி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 100 மெட்ரிக் டன் ஆக்சிஜன் அடுத்த வாரம் இறக்குமதி செய்யப்படும். அதன்பிறகு, தேவையின் அடிப்படையில் இறக்குமதிக்கான உத்தரவுகள் வழங்கப்படும் என்று அவா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT