முகப்பு
உலகம்

ஆப்கானிஸ்தானிலிருந்து 2 நாள்களில் 1,500 பேரை வெளியேற்ற பிரிட்டன் திட்டம்

ஆப்கானிஸ்தானிலிருந்து அடுத்த 2 நாள்களில் மேலும் 1,500 பேரை வெளியேற்ற அரசு திட்டமிட்டிருப்பதாக பிரிட்டன் பாதுகாப்புத் துறை அமைச்சர் பென் வாலஸ் திங்கள்கிழமை தெரிவித்தார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:55 AM
பகிர்:


ஆப்கானிஸ்தானிலிருந்து அடுத்த 2 நாள்களில் மேலும் 1,500 பேரை வெளியேற்ற அரசு திட்டமிட்டிருப்பதாக பிரிட்டன் பாதுகாப்புத் துறை அமைச்சர் பென் வாலஸ் திங்கள்கிழமை தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் தெரிவித்தது:

"ஆப்கானிஸ்தானிலிருந்து பிரிட்டிஷ் நாட்டினரைத் திரும்ப அழைத்து வந்த முதல் விமானம் திங்கள்கிழமை பிரிட்டன் வந்தடைந்தது. பிரிட்டன் மக்களுக்கு உதவிய ஆப்கன் நாட்டினர் உள்பட ஒருநாளைக்கு சுமார் 1,000 பேர் வரை அரசால் வெளியேற்ற முடியும். ஆகஸ்ட் 31-க்குள் ஆப்கன் மற்றும் பிரிட்டிஷ் மக்களை வெளியேற்ற வேண்டும் என திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், ஆப்கன் அரசு வேகமாகக் கவிழ்ந்ததால், அதை ஆகஸ்ட் 31 வரை திட்டமிட்டிருக்கக் கூடாது என்று தோன்றுகிறது.

மக்களை ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற்றுவதற்கு உதவ பிரிட்டிஷ் அரசு காபூலுக்கு 600 படைகளை அனுப்பியுள்ளது".

முன்னதாக, தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் அதிகாரத்தைக் கைப்பற்றினர். இதையடுத்து, போர் முடிவுக்கு வந்ததாக தலிபான் செய்தித் தொடர்பாளர் திங்கள்கிழமை அறிவித்தார். அதிகாரம் தலிபான்களிடம் சென்றதையடுத்து, ஏராளமான மக்கள் நாட்டைவிட்டு வெளியேற காபூல் விமான நிலையத்தில் குவிந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.