கோப்புப்படம் 
உலகம்

தூதரகங்களுக்குப் பாதுகாப்பு, பெண்கள் மீது பாகுபாடு இருக்காது: தலிபான்

​ஆப்கானிஸ்தானில் தூதரகங்களுக்குப் பாதுகாப்பு அளிக்கப்படும், பெண்கள் மீது பாகுபாடு காட்டப்படாது என்று தலிபான் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

DIN


ஆப்கானிஸ்தானில் தூதரகங்களுக்குப் பாதுகாப்பு அளிக்கப்படும், பெண்கள் மீது பாகுபாடு காட்டப்படாது என்று தலிபான் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

இதுகுறித்து, தலிபான் செய்தித்தொடர்பாளர் ஸபிஹுல்லா முஜாஹித் மேலும் கூறியது:

"தலிபான் துணைத் தலைவரும், இணை நிறுவனருமான அப்துல் கனி ஆப்கானிஸ்தான் திரும்பினார்.

இஸ்லாம் அடிப்படையில் பெண்களுக்கான உரிமைகள் வழங்க தலிபான் உறுதிபூண்டுள்ளது. சுகாதாரத் துறை மற்றும் தேவையான பிற துறைகளில் பெண்கள் பணிபுரியலாம். பெண்கள் மீது பாகுபாடு இருக்காது. 

காபூலிலுள்ள தூதரங்களின் பாதுகாப்பு எங்களுக்கு மிகவும் முக்கியமானது. அனைத்துத் தூதரகங்கள், சர்வதேச அமைப்புகள் உள்ளிட்டவற்றின் பாதுகாப்பை எங்களது அனைத்துப் படைகளும் உறுதிப்படுத்தும் என்பதை சர்வதேச நாடுகளுக்கு நாங்கள் உறுதியளிக்கிறோம்.

அனைத்துத் தரப்பையும் உள்ளடக்கிய அரசை அமைக்க விரும்புகிறோம்."

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ. 9 கோடிக்கு கேகேஆர் அணியில் இணைந்த முஸ்தஃபிசூர் ரஹ்மான்!

2025-ல் இந்திய எல்லைகளில் நடந்த ஊடுருவல், கைது எத்தனை?

ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவு சரிந்து ரூ. 91.01 ஆக நிறைவு!

ராஜஸ்தானில் வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு: 42 லட்சம் பேர் நீக்கம்!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இணைந்த விக்னேஷ் புத்தூர்!

SCROLL FOR NEXT