உலகம்

ரஷியாவில் அதிகரிக்கும் கரோனா: ஒருநாளில் 21,058 பேர் பாதிப்பு; 791 பேர் பலி

ரஷியாவில் புதிதாக 21,058 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 791 பேர் கரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். 

DIN

ரஷியாவில் புதிதாக 21,058 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 791 பேர் கரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். 

இதுகுறித்து அந்நாட்டின் சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 21,058 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 66,84,531 ஆக உயர்ந்துள்ளது. 

அதிகபட்சமாக தலைநகர் மாஸ்கோவில் 2,142 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாஸ்கோவில் பாதிப்பு 15,49,386 ஆக அதிகரித்துள்ளது. 

கரோனாவால் மேலும் 791 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 1,73,700 ஆக உயர்ந்துள்ளது. 

தற்போதைய நிலவரப்படி 5,36,841 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவிலிருந்து 24,017 பேர் குணமடைந்தனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 59,63,054 ஆக உயர்ந்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மக்கள் தடுப்பூசி போட வேண்டும் என்பதை வலியுறுத்தி மக்களுக்கு பல்வேறு சலுகைகளை அளித்து வருகிறது ரஷிய அரசு. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: பெரும்பான்மை இடங்களில் பாஜக வெற்றி!

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடக்கம்!

ஜனநாயகன் இசைவெளியீடு! இந்திய சினிமாவில் முதல்முறை! | Cinema Updates | Dinamani Talkies

வித் லவ் பாடல் புரோமோ!

விபி - ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

SCROLL FOR NEXT