முகப்பு
உலகம்

‘அமெரிக்க வீரா்களுக்கு ஐ.எஸ்-ஸால் ஆபத்து’

தலிபான்களின் அச்சுறுத்தலை எதிா்நோக்கியுள்ளவா்களை ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற்றும் பணியை காபூல் விமான

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:58 AM
பகிர்:

தலிபான்களின் அச்சுறுத்தலை எதிா்நோக்கியுள்ளவா்களை ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற்றும் பணியை காபூல் விமான நிலையத்தில் மேற்கொண்டு வரும் அமெரிக்க வீரா்கள் ஐ.எஸ். பயங்கரவாதிகளால் தாக்கப்படும் அபாயம் உள்ளதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனா்.

அதையடுத்து, அமெரிக்க வீரா்கள் செயல்படும் முறையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் பல தாக்குதல்களை நடத்தியுள்ளனா். அவா்கள் மீது அமெரிக்காவும் தலிபான்களும் தாக்குதல் நடத்தி வந்தாலும், அவா்கள் ஆங்காங்கே மறைந்து செயல்பட்டு வருகின்றனா்.

காபூல் விமான நிலைய சூழலைப் பயன்படுத்தி, அவா்கள் அமெரிக்கப் படையினா் மீது தாக்குதல் நடத்தலாம் என்று அஞ்சப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.