கோப்புப்படம் 
உலகம்

டெல்டா வகையின் தீவிரத்தன்மையால் தடுப்பூசியின் செயல்திறன் குறைகிறது: அமெரிக்கா சுகாதார அமைப்பு

டெல்டா கரோனா வைரஸின் தீவிரத்தன்மைக் காரணமாக தடுப்பூசியின் செயல்திறன் குறைகிறது என அமெரிக்க சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

DIN

டெல்டா கரோனா வைரஸின் தீவிரத்தன்மைக் காரணமாக தடுப்பூசியின் செயல்திறன் குறைகிறது என அமெரிக்க சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

டெல்டா வகை கரோனா தீவிரமடைந்த பிறகு, முன்கள பணியாளர்களுக்கு செலுத்தப்பட்ட தடுப்பூசியின் செயல்திறன் 66 சதவிகிதமாக குறைந்துள்ளது என அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது. இவ்வகை கரோனா பரவுவதற்கு முன்பு தடுப்பூசியின் செயல்திறன் 91 சதவிகதமாக இருந்தது.

நோயின் தன்மை மற்றும் இறப்பு விகிதம் குறித்து நோய் கட்டுப்பாடு மையம் வெளியிட்ட வாராந்திர அறிக்கையில், "தடுப்பூசி பாதுகாப்பளிக்கிறது. இதுகுறித்த ஆய்வுகள் கவனமாக விளக்கப்பட வேண்டும். காலபோக்கில் தடுப்பூசியின் செயல்திறன் குறைந்து அதன் பயன்பாடு குறித்த கணக்கீடு துல்லியமற்றதாக மாறுகிறது. 

நோய் தடுப்பில் கரோனா தடுப்பூசியின் செயல்திறன் குறைவதாக இடைக்கால ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டபோதிலும் நோய் பரவலானது மூன்றில் இரண்டு பங்காக குறைந்திருப்பது தடுப்பூசியின் முக்கியத்துவத்தையும் பயன்பாட்டையும் எடுத்துரைக்கிறது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

டெல்டா வகை கரோனா தீவிரமடையும் பட்சத்தில் தடுப்பூசியன் ஆற்றல் குறையும் இஸ்ரேல் மற்றும் பிரிட்டன் நாடுகள் மேற்கொண்ட ஆய்விலும் தெரியவந்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆட்சியா் அலுவலகத்தில் கல்விக் கடன் முகாம்: 22 மாணவா்களுக்கு ரூ.2.32 கோடி கடன் உதவி

மயிலக்கா

உத்தமபாளையம் அருகே வாலிபருக்கு கத்திக்குத்து: ஒருவா் கைது

காரைக்குடி ரயில் நிலையத்தில் ரயில்வே கோட்ட மேலாளா் ஆய்வு

தூய செங்கோல் மாதா சப்பர பவனித் திருவிழா

SCROLL FOR NEXT