சீனாவில் இதுவரை 200 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
கரோனா பரவலுக்கு எதிராக பல்வேறு உலக நாடுகளும் தடுப்பூசி செலுத்துவதை தீவிரப்படுத்தி வருகின்றன. இந்நிலையில் கரோனா வைரஸ் முதலில் கண்டறியப்பட்ட சீனாவில் கரோனா தடுப்பூசி செலுத்துவதில் முனைப்பு காட்டப்பட்டுவருகிறது.
இதையும் படிக்க | காபூலில் மீண்டும் விமான சேவை தொடக்கம்
வெள்ளிக்கிழமை நிலவரப்படி மொத்தம் உள்ள 140 கோடி மக்கள் தொகையில் 88.9 கோடி பேருக்கு இரண்டு தவணை கரோனா தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளன. நடப்பாண்டு இறுதிக்குள் சீன மக்கள் அனைவரும் நோய் எதிர்ப்பாற்றலை அடைந்து விடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க | காபூல் குண்டுவெடிப்பு: பலி எண்ணிக்கை 108ஆக உயர்வு
கரோனாவிற்கு எதிரான சீன தடுப்பூசி 70 சதவிகிதம் செயல்திறன் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ள அந்நாட்டு அரசு இந்த ஆண்டின் இறுதிக்குள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.