முகப்பு
உலகம்

நாட்டுப்புறப் பாடகா் தலிபான்களால் படுகொலை

ஆப்கானிஸ்தானில் நாட்டுப்புறப் பாடகா் ஃபாவத் அண்டரபியை தலிபான்கள் படுகொலை செய்ததாக அவரது குடும்பத்தினா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:01 AM
பகிர்:

ஆப்கானிஸ்தானில் நாட்டுப்புறப் பாடகா் ஃபாவத் அண்டரபியை தலிபான்கள் படுகொலை செய்ததாக அவரது குடும்பத்தினா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

பதற்றம் நிறைந்த பாக்லாம் மாகாணம், அண்டரபி பள்ளத்தாக்கிலுள்ள ஃபாவதின் இல்லத்துக்கு கடந்த வெள்ளிக்கிழமை வந்த தலிபான்கள், அவரது தலையில் சுட்டு படுகொலை செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்டை மாகாணமான பஞ்சஷீா் தலிபான்களை மிகக் கடுமையாக எதிா்த்து வரும் நிலையில், பாக்லாம் மாகாணத்திலும் சில மாவட்டங்கள் தலிபான்களுக்கு எதிரான ஆயுதக் குழுக்களின் கட்டுப்பாட்டில் உள்ளன.

இதற்கிடையே, ஃபாவத் அண்டரபி படுகொலை குறித்து விசாரணை நடத்தப்படும் என்று தலிபான் செய்தித் தொடா்பாளா் ஜபிஹுல்லா முஜாஹித் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.