ரஷியாவில் புதிதாக 19,286 பேருக்கு கரோனா
ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 19,286 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 19,286 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் 1,324 (6.9%) பேருக்கு எவ்வித அறிகுறியும் தென்படவில்லை. இதைத் தொடர்ந்து, ரஷியாவில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 68,82,827 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக மாஸ்கோவில் 1,444 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்க | ஆஸ்திரேலியாவில் தீவிரமாகும் கரோனா: ஊரடங்கு நீட்டிப்பு
மேலும் 797 பேர் நோய்த் தொற்றால் பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 1,81,637 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 16,804 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 61,48,250 பேர் குணமடைந்துள்ளனர்.