உலகம்

சவுதியில் முதல் ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டது

DIN

கரோனா தாக்கமே குறையாத நிலையில் ஒமைக்ரான் தொற்று செய்தி உலக நாடுகளிடையே பெரும் பதற்றத்தை உருவாக்கிய நிலையில், சவுதி அரேபியாவில் முதல் ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

தென் ஆப்பிரிக்காவில் வேகமாகப் பரவி வரும் ஒமைக்ரான் புதிய வகை தொற்று அதன் அண்டை நாடுகளையும் பாதித்து வருகிற வேளையில் வட ஆப்பிரிக்காவிலிருந்து சவுதி வந்த பயணியை பரிசோதனை செய்த போது அவருக்கு ஒமைக்ரான் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பாதிப்புக்குள்ளானவர் தீவிரமான கண்காணிப்பில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று  வருவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது.

சில நாட்களுக்கு முன் தென் ஆப்பிரிக்காவில் சவுதியின் விமானங்கள் நிறுத்தப்பட்டிருந்ததால் இணைப்பு விமானம் மூலம் ஆப்பிரிக்காவிலிருந்து வந்த பயணிக்கு தொற்று உறுதியானது கண்டறியப்பட்டிருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துணைவேந்தர்கள் நியமனம்.. ராகுல் காந்தி கருத்துக்கு கல்வியாளர்கள் எதிர்ப்பு!

தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க சிறப்பு ஏற்பாடு

பகல் கனவு காணும் பாஜக: நவீன் பட்நாயக் பதிலடி

இலங்கையில் திவ்ய பாரதி!

ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்ததா? தேசிய தேர்வு முகமை விளக்கம்

SCROLL FOR NEXT