முகப்பு
உலகம்

அதிர்வலைகளை ஏற்படுத்தும் ஓமைக்ரான்; தென்னாப்பிரிக்க விஞ்ஞானிகள் விடுத்த புதிய எச்சரிக்கை

புதிய உருமாறிய கரோனாவின் உண்மையான தாக்கத்தை அறிந்து கொள்வது தற்போது கடினமாக உள்ளது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:36 AM
கோப்புப்படம்
பகிர்:

நாம் தொடக்க கட்ட ஆராய்ச்சியில் தான் உள்ளோம். ஓமைக்ரான் வைரஸ், லேசான அளவிலேயே உடல் நலத்தை பாதிக்கிறது என்ற முடிவுக்கு வந்து விட முடியாது என முன்னணி தென்னாப்பிரிக்கா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

புதன்கிழமையன்று, ஓமைக்ரான் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் விஞ்ஞானிகள் விளக்குகையில், "புதிய உருமாறிய கரோனா வைரஸின் உண்மையான தாக்கத்தை தற்போது கண்டறிவது கடினமாக உள்ளது. ஏனெனில் இது இதுவரை பெரும்பாலும் இளைஞர்களை பாதித்துள்ளது. அவர்கள் நோய்க்கிருமியை எதிர்த்துப் போராட முடியும். மேலும் சில காலம் வைரஸால் பாதித்த பிறகும் மக்கள் நோய்வாய்ப்படுகிறார்கள்" என்றனர்.

இதுகுறித்து பொது சுகாதார கண்காணிப்பு மற்றும் மீட்புத்துறை தலைவர் மிச்செல் க்ரூம் கூறுகையில், "சமீபத்திய நோய்த்தொற்றுகள் பெரும்பாலும் இளைய வயதினரிடையே ஏற்பட்டுள்ளன. ஆனால் இந்த நகர்வை நாங்கள் பழைய வயதினரிடையேயும் பார்க்கத் தொடங்குகிறோம். மிகவும் கடுமையான சிக்கல்கள் சில வாரங்களுக்குத் தோன்றாமல் போகலாம் என்றும் நாங்கள் எதிர்பார்க்கிறோம்" என்றார்.

முன்னதாக, கடந்த 24 மணி நேரத்தில், தென்னாப்பிரிக்காவில் ஓமைக்ரான் கரோனா இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. 8,561 பேருக்கு பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது என தொற்று நோய்களுக்கான தேசிய நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த நவம்பர் 25ஆம் தேதி, புதிய உருமாறிய கரோனா தென்னாப்பிரிக்காவில் முதல்முறையாக கண்டறியப்பட்டது. பின்னர், அதற்கு ஓமைக்ரான் என உலக சுகாதார அமைப்பு பெயரிட்டது. இதன் காரணமாக, பங்கு சந்தை கடும் சரிவை சந்தித்தது. 

ஆப்பிரிக்க நாடுகளுக்கு செல்ல பல்வேறு நாடுகள் கட்டுப்பாடு விதித்தன. கேஆர்ஐஎஸ்பி மரபியல் நிறுவனத்தில் தொற்று நோய் நிபுணராக பணியாற்றிவரும் ரிச்சர்ட் லெசெல்ஸ், "பலர் ஏற்கனவே மற்ற வகைகளால் பாதிக்கப்பட்டிருப்பதாலும் தடுப்பூசி போடப்பட்டிருப்பதாலும், அவர்களுக்கு கிடைக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை புதிய உருமாறிய கரோனா ஏற்படுத்தும் நோயின் தீவிரம் குறைக்கும்" என்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →