இங்கிலாந்தில் ஒமைக்ரான் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 246-யைக் கடந்தது.
உலக நாடுகள் உருமாறிய கரோனா(ஒமைக்ரான்) தொற்றுப் பரவலால் பாதித்து வருகிற நிலையில் இங்கிலாந்தில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 246 ஆக உயர்ந்திருக்கிறது.
இதனால் அந்நாட்டில் பயண நெறிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக , ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து வருவோர் கட்டாயத் தனிமையில் வைக்கப்படுவார்கள் என்றும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தொற்று பாதிப்பு இல்லையென்றால் மட்டுமே வீட்டிற்கு அனுமதிக்கப்படுவார்கள் என அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சர் சஜித் ஜாவிட் தெரிவித்திருக்கிறார்.
நேற்று முன் தினம் நைஜீரியாவிலிருந்து இங்கிலாந்து வந்த பயணிகள் அனைவரும் தங்குமிடங்களிலும் மருத்துவமனையிலும் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள்.
மேலும் தற்போதைய நிலவரப்படி இங்கிலாந்தில் 88.8 லட்சம் பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் , 1.27 லட்சம் பேர் தொற்றின் தீவிரத்தால் பலியாகியிருக்கிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.