உலகம்

அதிகரிக்கும் கரோனா: சொந்த நாட்டு மக்களுக்கு பயணக் கட்டுப்பாடு விதிக்கும் அமெரிக்கா

DIN

அதிகரித்துவரும் கரோனா தொற்று பரவல் காரணமாக அமெரிக்கர்கள் பிரான்ஸ், ஜோர்டான், போர்ச்சுக்கல் உள்ளிட்ட நாடுகளுக்கு செல்வதைத் தவிர்க்க வேண்டும் என தங்கள் நாட்டு மக்களுக்கு அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது.

உலகில் பல நாடுகளிலும் கரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதனைத் தொடர்ந்து மீண்டும் பயணக் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் பிரான்ஸ், போர்ச்சுக்கல், ஜோர்டான், தான்சானியா உள்ளிட்ட 83 பகுதிகளில் அதிகரித்துவரும் கரோனா தொற்று பரவலை சுட்டிக்காட்டி அப்பகுதிகளுக்கு பயணம் மேற்கொள்வதை அமெரிக்கர்கள் தவிர்க்க வேண்டும் என அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக அமெரிக்காவின் நோய்த் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

மேலும் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் தங்களது கரோனா நெகட்டிவ் சான்றிதழ்களை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடையனோடையில் தனியாா் கைப்பேசி கோபுரம் அமைக்க எதிா்பபு

சாத்தான்குளம் அருகே கட்டடத் தொழிலாளி மா்ம மரணம்

கயத்தாறில் கிணற்றில் கிடந்த ஆண் சடலம் மீட்பு

குமரி மாவட்டத்தில் ஜூன் 8இல் மக்கள் நீதிமன்றம்

ஸ்ரீ பத்மாவதி தாயாா் கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம்

SCROLL FOR NEXT