அமெரிக்காவில் கரோனாவால் 8 லட்சம் பேர் பலி
அமெரிக்காவில் கரோனாவால் கடந்த ஆண்டிலிருந்து தற்போது வரை 8 லட்சம் பேர் பலியானதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்திருக்கிறது.
அமெரிக்காவில் கரோனாவால் கடந்த ஆண்டிலிருந்து தற்போது வரை 8 லட்சம் பேர் பலியானதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்திருக்கிறது.
உலகளவில் கரோனாவால் பெரிய பாதிப்பை சந்தித்து வரும் அமெரிக்காவில் தொற்றின் தீவிரத்தால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இதையும் படிக்க | உலகளவில் கரோனாவால் 27.14 கோடி பேர் பாதிப்பு
இந்நிலையில் அமெரிக்காவில் நேற்று(டிச-14) கரோனா தொற்றின் காரணமாக 2,054 பேர் பலியானதைத் தொடர்ந்து இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 8,00,343 ஆக உயர்ந்திருக்கிறது. இதனால் உலகில் கரோனாவால் அதிகம் உயிரிழந்தவர்களின் நாடுகளில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது.
இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 5.01 கோடியாக பதிவாகியிருக்கிறது.
இந்த நிலையில் ஒமைக்ரான் தொற்று காரணமாக அமெரிக்காவில் தீவிரமாக தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.