முகப்பு
உலகம்

பிரேசிலில் கரோனா பாதிப்பு 90 லட்சத்தைக் கடந்தது!

பிரேசிலில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 90 லட்சத்தைக் கடந்துள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:24 PM
கோப்புப்படம்
பகிர்:

பிரேசிலில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 90 லட்சத்தைக் கடந்துள்ளது. 

உலக அளவில் கரோனா அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் 3 ஆம் இடத்தில் பிரேசில் உள்ளது. கரோனா இரண்டாம் அலை காரணமாக பிரேசிலில் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. 

இந்நிலையில் அந்நாட்டு சுகாதார அமைப்பு கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கரோனா பாதிப்பு விவரங்களை வெளியிட்டுள்ளது. 

Advertisement

அதன்படி, பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 61,811 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 90,58,687 ஆக அதிகரித்துள்ளது. 

நேற்று மட்டும் கரோனாவுக்கு 1,386 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து கரோனா பலி 2,21,547 ஆக அதிகரித்துள்ளது. 

அதேநேரத்தில் 79,23,794 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 9,15,316 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், 8,318 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments