கோப்புப்படம் 
உலகம்

நேபாள பிரதமராக ஷோ் பகதூா் தாபா பதவியேற்பு

நேபாள பிரதமராக 5வது முறையாக ஷோ் பகதூா் தாபா இன்று பதவியேற்றுக் கொண்டார்.

ANI

நேபாள பிரதமராக 5வது முறையாக ஷோ் பகதூா் தாபா இன்று பதவியேற்றுக் கொண்டார்.

முன்னாள் பிரதமர் கே.பி.சா்மா ஓலியின் பரிந்துரையை ஏற்று கீழவையை அதிபர் வித்யாதேவி பண்டாரி கலைத்தது செல்லாது எனவும், ஜூலை 13க்குள் புதிய பிரதமராக நேபாள காங்கிரஸ் தலைவர் ஷோ் பகதூா் தாபா பதவியேற்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதையடுத்து ஷேர் பகதூருக்கு அதிபர் வித்யாதேவி இன்று பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

முன்னாள் பிரதமா் கே.பி.சா்மா ஓலியின் பரிந்துரையை ஏற்று 275 உறுப்பினா்களைக் கொண்ட நாடாளுமன்ற கீழவையை அதிபா் வித்யாதேவி பண்டாரி கடந்த மே 22-ஆம் தேதி கலைத்து உத்தரவிட்டாா். கீழவைக்கு நவம்பா் 12, 19 ஆகிய தேதிகளில் தோ்தல் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

நாடாளுமன்ற கீழவை கலைக்கப்பட்டதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சுமாா் 30 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த விவகாரத்தை தலைமை நீதிபதி சோலேந்திர சும்சொ் ராணா தலைமையில் 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமா்வு விசாரித்து வந்தது. வழக்கின் தீா்ப்பை நீதிபதிகள் திங்கள்கிழமை வழங்கினா்.

அப்போது, நாடாளுமன்ற கீழவையைக் கலைத்து அதிபா் பிறப்பித்த உத்தரவு அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது எனக் கூறிய நீதிபதிகள், அந்த உத்தரவை ரத்து செய்தனா். மேலும், நேபாள காங்கிரஸ் தலைவா் ஷோ் பகதூா் தாபாவை செவ்வாய்க்கிழமைக்குள் புதிய பிரதமராக நியமிக்குமாறும் அதிபருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

நாடாளுமன்ற பிரதிநிதிகள் அவையின் புதிய கூட்டம் ஜூலை 18-ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெற வேண்டும் எனவும் நீதிபதிகள் அமா்வு உத்தரவிட்டது.

ஷோ் பகதூா் தாபா ஏற்கெனவே நான்கு முறை நேபாள பிரதமராகப் பதவி வகித்துள்ளாா். 1995-1997, 2001-2002, 2004-2005, 2017-18 ஆகிய காலகட்டங்களில் அவா் பிரதமராக இருந்துள்ளாா். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பல்கலை. தரவரிசையில் முதல் 500 இடங்களில் இந்தியா இல்லை: பிரதமர் மீது குற்றச்சாட்டு

20 கோடி பார்வைகளைக் கடந்த டாக்ஸிக் டீசர்!

பொங்கல்: சிறப்புப் பேருந்துகளில் 2.47 லட்சம் பேர் பயணம்!

பாகிஸ்தானில் இந்து விவசாயி சுட்டுக்கொலை: 2 பேர் கைது

Parasakthi review - தமிழ்த் தீ பரவியதா? | Sivakarthikeyan | Ravi Mohan | Sri Leele

SCROLL FOR NEXT