மாலத்தீவிற்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
கடந்த ஆண்டை விட இந்தாண்டு மாலத்தீவிற்கு வரும் சுற்றலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக அந்நாட்டு சுற்றுலாத்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.
கடந்த ஆண்டை விட இந்தாண்டு மாலத்தீவிற்கு வரும் சுற்றலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக அந்நாட்டு சுற்றுலாத்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.
இந்த ஆண்டில் ( ஜனவரியிலிருந்து ஜுலை மாதம் வரை ) தற்போது 5,59,000 சுற்றுலா பயணிகள் வந்திருப்பதாகவும் , இது கடந்த 2020 ஆம் வருடத்தில் இங்கு வந்த மொத்த பயணிகளின் எண்ணிக்கையை விட அதிகம் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் இந்தாண்டு இறுதிக்குள் 1.30 கோடி சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என எதிர் பார்க்கப்படுவதாகவும் இதுவரை நாள் ஒன்றுக்கு 5,000 புதிய பயணிகள் மாலத்தீவிற்கு வருகை தருவதாகவும் அதில் 23 சதவீதத்தினர் தெற்கு ஆசியாவின் அண்டை நாடுகளிலிருந்து வருவதாக சுற்றுலாத்துறை அமைச்சர் அப்துல்லா மஸூம் தெரிவித்திருக்கிறார்.
2020 ஆம் ஆண்டு பயணிகளின் வருகை குறைந்ததற்கு கரோனா பெருந்தொற்று முக்கியக் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது,