ரஷ்யா : கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 60 லட்சத்தைக் கடந்தது
கடந்த 24 மணி நேரத்தில் ரஷ்யாவில் புதிதாக கரோனா நோய்த் தொற்றால் 23,770 பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என அந்நாட்டு கரோனா கண்காணிப்பு மையம் தெரிவித்திருக்கிறது
கடந்த 24 மணி நேரத்தில் ரஷ்யாவில் புதிதாக கரோனா நோய்த் தொற்றால் 23,770 பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என அந்நாட்டு கரோனா கண்காணிப்பு மையம் தெரிவித்திருக்கிறது . இதன் மூலம் நாட்டில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 60 லட்சத்தைத் தாண்டி இருக்கிறது.
மேலும் நாடு முழுக்க தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 784 லிருந்து 1,49,922 ஆகவும் தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 22,218 லிருந்து 5,382,213 ஆகவும் உயர்ந்திருக்கிறது.
கரோனாப் பரவலில் ரஷ்யாவின் மோசமானப் பகுதியாக மாஸ்கோ தொடர்ந்து நீட்டித்து வருவதாகவும் புதிதாக கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் 3,188 பேர் எனவும் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் 1.47 லட்சம் என்றும் கரோனா கண்காணிப்பு மையம் தெரிவித்திருக்கிறது.
ரஷ்யாவில் இதுவரை 16 கோடி பேருக்கு கரோனா மாதிரி பரிசோதனைகள் எடுக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.