முகப்பு
உலகம்

அமெரிக்கா : 40 லட்சம் குழந்தைகளுக்கு கரோனா நோய்த் தொற்று

அமெரிக்காவில் இதுவரை   40 லட்சம் குழந்தைகள் கரோனா நோய்த் தொற்றுக்கு ஆளாகியிருப்பதாக அமெரிக்க குழந்தைகள் நல மருத்துவத்துறை  தெரிவித்திருக்கிறார்கள்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:44 AM
அமெரிக்கா 40 லட்சம் குழந்தைகள் கரோனா நோய்த் தொற்றுக்கு ஆளாகியிருப்பதாக அமெரிக்க குழந்தைகள் நல மருத்துவ நிர்வாகம் தெரிவித்திருக்கிறார்கள். பதிவுசெய்யப்பட்ட கணக்குகளின் படி 40.9 லட்சம் குழந்தைகள் கரோ
பகிர்:

அமெரிக்காவில் இதுவரை   40 லட்சம் குழந்தைகள் கரோனா நோய்த் தொற்றுக்கு ஆளாகியிருப்பதாக அமெரிக்க குழந்தைகள் நல மருத்துவத்துறை  தெரிவித்திருக்கிறார்கள்.

 பதிவுசெய்யப்பட்ட கணக்குகளின் படி   40.9 லட்சம் குழந்தைகள் கரோனா தொற்றுக்கு ஆளாகியிருப்பதாகவும் கடந்த வார இறுதியில் இதுவரை இல்லாத அளவிற்கு புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது எனவும் கூறியிருக்கிறார்கள்.

 அமெரிக்காவில் நோய்த் தாக்குதலுக்கு ஆளானவர்களில் 14.2 சதவீதம் பேர் குழந்தைகள் எனவும்   ஜுலை 1 - 15 ஆம் தேதி வரை  23,500 குழந்தைகளுக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது எனவும் தெரிவித்திருக்கிறார்கள்.

தற்போது  கரோனாவின் தாக்கம் குழந்தைகள் மத்தியில் அரிதாகவே காணப்படுகிறது. இருப்பினும் , வைரஸ் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நீண்டகால உடல் ஆரோக்கியத்திற்கும் மனநல பாதிப்புகளுக்கும் தீங்கு விளைவிக்கும் வழிகள் இருப்பதால்   தொற்றின்  நீண்டகால பாதிப்புகள் குறித்த கூடுதல் தரவுகளை சேகரிக்க வேண்டிய அவசியம் உள்ளதாகவும் அமெரிக்க குழந்தைகள் மருத்துவத்துறை அறிவித்திருக்கிறார்கள்.

முழு கட்டுரையைப் படிக்க →