முகப்பு
உலகம்

சீன நகரை சூழ்ந்த புழுதிப்புயல்: அதிர வைக்கும் காட்சிகள்

சீனாவில் உள்ள டன்ஹூவாங் நகரத்தில் 300 அடி உயரத்திற்கு எழுந்த புழுதிப் புயல் நகரைச் சூழ்ந்துள்ளதால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:46 AM
சீன நகரை சூழ்ந்த புழுதிப்புயல்: அதிர வைக்கும் காட்சிகள்
பகிர்:

சீனாவில் உள்ள டன்ஹூவாங் நகரத்தில் 300 அடி உயரத்திற்கு எழுந்த புழுதிப் புயல் நகரைச் சூழ்ந்துள்ளதால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர்.

சீனாவின் வடமேற்கு மாகாணமான கன்சுவில் உள்ள கோபி பாலைவன எல்லையில் அமைந்துள்ள நகரம் டன்ஹுவாங். இந்த நகரத்தில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட புழுதிப்புயல் மக்களைக் கலங்கடித்துள்ளது. 

சுமார் 300 அடி உயரத்திற்கு திடீரென எழுந்த புழுதிப்புயலானது டன்ஹூவாங் நகரத்தைச் சூழ்ந்துள்ளதால் மக்கள் தங்கள் அன்றாட பணிகளை மேற்கொள்ள முடியாமல் வீடுகளுக்குள் முடங்கியுளனர்.

5 முதல் 6 நிமிடங்களுக்குள்ளாகவே மொத்த நகரத்தையும் புழுதிப்புயல் சூழும் காணொலி தற்போது சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டு வருகிறது.

திரைப்படக் காட்சிகளில் வரும் பேரலை தாக்குவது போன்ற இந்தக் காட்சிகள் காண்போரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →