உலகம்

சீன வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்த தலிபான்கள்

DIN

ஆப்கானிஸ்தானின் தற்போதைய பொருளாதாரம், அரசியல் மற்றும் சமூக நிலை குறித்து அப்துல் கானி தலைமையில் தலிபான் குழு ஒன்று சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ யை சந்தித்தனர். 

சந்திப்பிற்கு பின் அளித்த தகவல்களில் தலிபான்களால் சீன நிலப்பகுதிக்கு எந்தவித தொந்தரவும் வந்துவிடக் கூடாது எனக்  கூறியதாக தெரிவித்தனர்.

அமெரிக்கா மற்றும் நோடா படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு விலகியதால் தலிபான்களின் தாகுதல்கள் அதிகரித்து வருகிறது. தற்போது பாகிஸ்தான் , ஈரான் மற்றும் உஸ்பெகிஸ்தான் எல்லைப் பகுதிகளை கைப்பற்றி வரும் தலிபான்கள் தங்களுடைய தாக்குதலை அப்பாவி மக்கள் மீதும் ராணுவத்தின் மீதும் செலுத்தி வருகிறார்கள்.  

கடந்த  ஜுன் மாதம் பாகிஸ்தான் மற்றும் ஆப்கனைச் சேர்ந்த தலிபான் ஆதரவாளர்களைச் சந்திந்த வாங் ‘ தலிபான்களை மீண்டும் ஆப்கானிஸ்தானின் அரசியலில் அமரச் செய்கிறேன் ‘ என உறுதி அளித்ததோடு ஆப்கன் அமைதிப் பேச்சு வார்த்தைக்கும் அவர் அழைப்பு விட்டார். 

தற்போது எல்லைமீறி ஆப்கானிஸ்தானில்  நடந்து கொண்டிருக்கும் தாக்குதலை நிறுத்துவதற்கு தாலிபான்களுடன் ஆப்கன் அரசு பேச்சுவார்த்தை நடத்த தீவிரம் காட்டி வருகிறது.

அமெரிக்கப் படைகள்  ஆப்கானிஸ்தானிலிருந்து  வெளியேறியதைத் தொடர்ந்து தலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சீனா தன்னுடயை அரசியலை கையில் எடுக்கிறது என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

கருப்பு வெள்ளைப் பூ.. ரவீனா தாஹா!

'தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கும் பெறாதவர்களுக்கும்..’ : கமல்ஹாசனின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT