முகப்பு
உலகம்

ஆப்கானிஸ்தான் : வெள்ளப்பெருக்கில் சிக்கி 40 பேர் பலி

ஆப்கனிஸ்தான் நாட்டின் காம்திஷ் பகுதியில் நேற்று ( புதன்கிழமை) இரவு பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது இதில்  40 பேர் வரை உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது .

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:47 AM
ஆப்கானிஸ்தான் : வெள்ளப்பெருக்கில் சிக்கி 40 பேர் பலி
பகிர்:

ஆப்கனிஸ்தான் நாட்டின் காம்திஷ் பகுதியில் நேற்று ( புதன்கிழமை) இரவு பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில்  40 பேர் வரை உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது .

தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் இதுவரை பலியான 40 பேரின் உடலை கைப்பற்றியதாகவும் 150 வரை மாயமானதாகவும் தெரிவித்தனர். 

இரவோடு இரவாக 80 வீடுகளும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் உயிரிழப்பின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக மீட்புப் பணியில் இருந்த மீட்புப்படையினர் கூறியிருக்கிறார்கள்.

கடந்த மாதம் ஹெராத் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 12 பலியானது குறிப்பிடத்தக்கது .

முழு கட்டுரையைப் படிக்க →