முகப்பு
உலகம்

பாகிஸ்தானில் பேருந்து விபத்து: 18 பேர் பலி

பாகிஸ்தானில் பேருந்து விபத்துக்குள்ளானதில் 18 பேர் பலியானார்கள். 

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:23 AM
பகிர்:

பாகிஸ்தானில் பேருந்து விபத்துக்குள்ளானதில் 18 பேர் பலியானார்கள். 

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தின் கூழர் பகுதியில் இருந்து லர்கனா நோக்கி புறப்பட்ட பேருந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 18 பேர் பலியானார்கள். 30 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

அவர்களில் 6 பேரின் நிலைமை கவலைகிடமாக உள்ளது. பேருந்து அதிவேகமாகச் சென்று வளைவில் திரும்பியபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்றறு வருகிறது. 

அண்மையில் சிந்து மாகாணத்தில் இரண்டு ரயில்கள் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானதில் 62 பேர் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

முழு கட்டுரையைப் படிக்க →