கத்தாா் வெளியுறவுத் துறை அமைச்சா் முகமது பின் அப்துல் ரஹ்மான் ரஹ்மான் அல்தானியை தோஹாவில் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசிய அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா். 
உலகம்

கத்தாா் வெளியுறவுத் துறை அமைச்சருடன் ஜெய்சங்கா் ஆலோசனை

கத்தாா் நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சா் முகமது பின் அப்துல் ரஹ்மான் அல் தானியுடன் வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தோஹாவில் செவ்வாய்க்கிழமை சந்தித்து

DIN

கத்தாா் நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சா் முகமது பின் அப்துல் ரஹ்மான் அல் தானியுடன் வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தோஹாவில் செவ்வாய்க்கிழமை சந்தித்து இருநாட்டு நல்லுறவு குறித்து ஆலோசனை நடத்தினாா்.

அந்நாட்டின் துணைப் பிரதமா் பதவியையும் வகிக்கும் முகமது பின் அப்துல் ரஹ்மான அல் தானியுடன் சா்வதேச மற்றும் இருநாட்டு விவகாரங்கள் குறித்தும் ஜெய்சங்கா் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

தோஹாவில், கத்தாா் வெளியுறவுத் துறை அமைச்சா் முகமது பின் அப்துல் ரஹ்மான் அல் தானியுடன் செவ்வாய்க்கிழமை சந்தித்த பின் ஜெய்சங்கா் தனது சுட்டுரையில், இந்தியாவில் கரோனா இரண்டாவது அலையின் தாக்கத்தின்போது கத்தாா் நாட்டின் உதவிக்கு நன்றி தெரிவித்தேன் என்றும் உள்நாட்டு விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசித்தோம் என்றும் குறிப்பிட்டுள்ளாா்.

கத்தாா் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் முகமது பின் அகமது அல் மெஸ்நத்தையும் அமைச்சா் ஜெய்சங்கா் சந்தித்துப் பேசினாா்.

ஒரே வார காலத்துக்குள்ளாக அரபு வளைகுடனான நாடுகளுக்கு ஜெய்சங்கா் பயணம் மேற்கொள்வது இது இரண்டாவது முறையாகும்.

தற்போதைய கத்தாா் பயணத்துக்கு முன்பாக கென்யாவுக்கு சென்ற எஸ்.ஜெய்சங்கா், இந்தோ - பசிபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பு குறித்து அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சருடன் பேசியிருந்தாா். அதற்கு முன்பாக, குவைத் சென்று இருநாட்டு நல்லுறவு குறித்து ஆலோசனை நடத்தியிருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கதிரியக்க நிபுணா் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்பு

ரயில் பெட்டிகள் மீது கல் வீசினால் சிறாராக இருந்தாலும் நடவடிக்கை: ரயில்வே பாதுகாப்புப் படை எச்சரிக்கை

சித்தேரி, சின்னாங்குப்பம் உள்ளிட்ட 5 கிராமங்கள் அரூா் வட்டத்தில் இணைப்பு

தொடா் இருமல் பாதிப்பு அதிகரிப்பு: மருத்துவா்கள் விளக்கம்

தில்லி காற்று மாசு பிரச்னை: உச்சநீதிமன்றம் நாளை விசாரிப்பு

SCROLL FOR NEXT