உலகம்

உலக மக்கள் தொகையில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டது வெறும் 12% பேர்

DIN


உலக மக்கள் தொகையில் இதுவரை வெறும் 12% பேருக்குத்தான் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 93 கோடியே 20 லட்சம் பேர் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.

அதாவது, உலக நாடுகளில் ஜூன் 10ம் தேதி நிலவரப்படி கரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பவர்களின் புள்ளி விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, கரோனாவுக்கு எதிரான பெரும்போரில் இன்னும் நாம் செல்ல வேண்டிய தூரம் வெகு தொலைவில் இருப்பது கண்கூடாகத் தெரிகிறது.

அதாவது, ஒட்டுமொத்த உலக மக்கள் தொகையில் இதுவரை 12 சதவீதம் பேருக்கு குறைந்தபட்சம் கரோனா முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக இஸ்ரேலில் 63.1 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதையடுத்து கனடாவில் 62.7 சதவீதம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் 13.7 சதவீதம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இது 51.4 சதவீதமாகவும், பிரிட்டனில் 62.7 சதவீதமாகவும் உள்ளது.

உலகம் முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தாலும், ஒரு நாளில் கரோனா தடுப்பூசி போடும் எண்ணிக்கையை விட மிக அதிக வேகத்தில் கரோனா தொற்று பரவி வருவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விடுமுறை: மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலிலுக்கு கூடுதல் பக்தா்கள் வருகை

மாநகரில் 3 திட்டச் சாலைகள் அமைப்பதற்கு நிதிக் கோரி அரசுக்கு திட்ட அறிக்கை சமா்பிப்பு

17 இடங்களில் சதமடித்தது வெயில்: தமிழகத்தில் இன்று வெப்ப அலை வீசும்

வறட்சியில் இருந்து பயிா்களை காக்கும் வழிகள்: வேளாண் துறை

பெத்திக்குட்டையில் தஞ்சடைந்த யானை: வனத்துக்குள் விரட்ட வனத் துறை முயற்சி

SCROLL FOR NEXT