பாகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவு
பாகிஸ்தான் நாட்டின் தலைநகர் இஸ்லாமாபாத்தில் வியாழக்கிழமை 4.8 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
பாகிஸ்தான் நாட்டின் தலைநகர் இஸ்லாமாபாத்தில் வியாழக்கிழமை 4.8 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதுதொடர்பாக பாகிஸ்தான் தேசிய நில அதிர்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்
பாகிஸ்தான் நாட்டின் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருந்து 114 கி.மீ தூரத்தில் வியாழக்கிழமை மாலை 7.49 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.8 -ஆகப் பதிவாகியுள்ளது.
இதுவரை உயிர்ச்சேதம் மற்றும் பாதிப்புகள் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை.