இந்தியாவுடனான எல்லை மூடலை ஜூலை 14 வரை நீட்டித்தது வங்கதேசம்
கரோனா தொற்று பரவல் காரணமாக இந்திய நாட்டுடனான எல்லை மூடலை ஜூலை 14 வரை நீட்டித்து வங்கதேச அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கரோனா தொற்று பரவல் காரணமாக இந்திய நாட்டுடனான எல்லை மூடலை ஜூலை 14 வரை நீட்டித்து வங்கதேச அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
நாட்டில் அதிகரித்துவந்த கரோனா தொற்று பரவல் காரணமாக இந்திய நாட்டுடனான எல்லையை கடந்த ஏப்ரல் மாதம் வங்கதேசம் மூடியது.
இந்நிலையில் வங்கதேசத்தில் தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் எல்லை மூடலை மேலும் சில தினங்களுக்கு நீட்டித்து அந்நாட்டு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி ஜூலை 14ஆம் தேதி வரை எல்லை மூடல் நடைமுறையில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் சரக்குப் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வங்கதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 8 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.