சீனாவின் கரோனாவேக் தடுப்பூசி: '3-17 வயதினருக்கு பாதுகாப்பானது'
சீனாவின் கரோனாவேக் தடுப்பூசியானது 3 முதல் 17 வயதுடையோருக்கு நல்ல பலனை அளிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
சீனாவின் கரோனாவேக் தடுப்பூசியானது 3 முதல் 17 வயதுடையோருக்கு நல்ல பலனை அளிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
மேலும் குழந்தைகளிடையே அதிக நோய் எதிர்ப்பு திறனைத் தூண்டுவதாகவும் ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக லான்சன் தொற்று நோய் இதழ் வெளியிட்டுள்ள தகவலில், மொத்தம் 550 பேரிடம் கரோனாவேக் தடுப்பூசி சோதனை நடத்தப்பட்டது.
இரண்டு டோஸ் செலுத்தி பரிசோதனை நடத்தப்பட்ட குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடையே 96 சதவிகிதம் பலனளிப்பதாகத் தெரியவந்துள்ளது.
தடுப்பூசி செலுத்திய பிறகு பெரும்பாலான விளைவுகள் லேசான அல்லது மிதமானவைகயாக மட்டுமே இருந்துள்ளன. பொதுவாக ஊசி செலுத்திய இடத்தில் உண்டாகும் வலி போன்றவை மட்டுமே விளைவுகளாக அறியப்பட்டுள்ளது.
முதல் கட்ட பரிசோதனையில் 1.5 மைக்ரோகிராம் தடுப்பூசியும், 3 மைக்கிரோகிராம் தடுப்புசியும் செலுத்தப்பட்டது. இதில் 3 மைக்ரோகிராம் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களிடையே 100 சதவிகித பலனும், 1.5 மைக்ரோகிராம் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களிடையே 97 சதவிகித பலனும் கண்டறியப்பட்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.