தனிநபர் வருமானத்தில் இந்தியாவை முந்திய வங்கதேசம்
2020-21 ஆம் நிதியாண்டின் தனிநபர் வருமானத்தில் வங்கதேசம் இந்தியாவை முந்தியுள்ளது.
2020-21 ஆம் நிதியாண்டின் தனிநபர் வருமானத்தில் வங்கதேசம் இந்தியாவை முந்தியுள்ளது.
சுதந்திரம் பெற்ற பிறகு வறுமையில் தவித்து வந்த வங்கதேசம் தற்போது சீராக வளர்ந்து வருகிறது. இந்நிலையில் கரோனா தொற்று மத்தியிலும் வங்கதேசத்தில் தனிநபர் வருமானம் கடந்த நிதியாண்டைக் காட்டிலும் அதிகரித்துள்ளதாக அந்நாட்டின் திட்ட அமைச்சர் எம்.ஏ.மன்னன் தெரிவித்தார்.
2020-21 ஆம் நிதியாண்டில் வங்கதேசத்தின் தனிநபர் வருமானம் 2,227 அமெரிக்க டாலராக அதிகரித்துள்ளது. இது கடந்த நிதியாண்டில் 2,064 ஆக இருந்தது.
வங்கதேசத்தின் தனிநபர் வருமானம் இந்தியாவுடன் ஒப்பிடும்போது 280 டாலர்கள் அதிகமாகும். இந்தியாவில் 2020-21ஆம் நிதியாண்டில் தனிநபர் வருமானம் 1947 டாலர்களாக உள்ளது.
தற்போது வங்கதேசத்தின் தனிநபர் வளர்ச்சி விகிதம் 9% ஆக உயர்ந்துள்ள நிலையில் 2007 ஆம் ஆண்டில், வங்கதேசத்தின் தனிநபர் வருமானம் இந்தியாவுடன் ஒப்பிடும்போது பாதியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.