முகப்பு
உலகம்

வாடிக்கையாளர் தவறவிட்ட ஐபோனை 8 மாதங்களுக்குப் பிறகு பத்திரமாக ஒப்படைத்த கார் ஓட்டுநர்

தனது காரில் பயணித்த வாடிக்கையாளர் தவறவிட்ட ஐபோனை 8 மாதங்களுக்குப் பிறகு பத்திரமாக ஒப்படைத்த ஓட்டுநரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:16 PM
கோப்புப்படம்
பகிர்:

தனது காரில் பயணித்த வாடிக்கையாளர் தவறவிட்ட ஐபோனை 8 மாதங்களுக்குப் பிறகு பத்திரமாக ஒப்படைத்த ஓட்டுநரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

லண்டனில் வாடகை கார் ஒன்றில் பெண் ஒருவர் 8 மாதங்களுக்கு முன்பாக பயணம் செய்துள்ளார். அப்போது ஐபோனை தவறவிட்ட அவர் பல்வேறு இடங்களில் அதனைத் தேடியும் கிடைக்காததால் ஏமாற்றமடைந்தார். 

இந்நிலையில் ஐபோன் ஒன்று தனது காரில் இருந்ததைக் கண்ட ஓட்டுநர் அது பயணி ஒருவருடையது என்பதை உறுதி செய்த பின் அதனைப் பத்திரப்படுத்தியுள்ளார். ஐபோனை தவறவிட்ட பெண்ணை தொடர்பு கொள்ள முயற்சித்த ஒட்டுநரின் முயற்சி தோல்வியடைந்தது. 

இந்நிலையில் 8 மாதங்களுக்குப் பிறகு ஐபோனை தவறவிட்ட பயணி மீண்டும் தனது காரில் தற்செயலாக பயண செய்ய முன்பதிவு செய்ததைக் கண்டு மகிழ்ந்த ஓட்டுநர் அவரைத் தொடர்பு கொண்டு தான் பத்திரப்படுத்தி வைத்திருந்த அவரது ஐபோனை அவரிடம் ஒப்படைத்தார். 

தொலைந்து போன ஐபோன் 8 மாதங்களுக்குப் பிறகு கிடைத்ததைக் கண்டு ஆச்சர்யமடைந்த பெண் பயணி வாடகைக் கார் ஒட்டுநருக்கு தனது நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்தார். 

பிறரின் பொருள் மீது ஆசை கொள்ளாமல் குறிப்பிட்ட நபரிடம் அவரது தொலைந்து போன ஐபோனை பத்திரமாக ஒப்படைத்த வாகன ஓட்டுநரை பல தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →