உலகம்

‘கரோனா விவகாரத்தில் வெளிப்படையாகவே செயல்படுகிறோம்’: அமெரிக்காவிற்கு சீனா பதில்

DIN

கரோனா தொற்று விவகாரத்தில் சீனா வெளிப்படையாகவே உள்ளதாக அந்நாட்டு அரசு அமெரிக்க அரசுக்கு பதிலளித்துள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டின் இறுதியில் சீனத்தின் வூஹான் மாகாணத்தில் கரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து உலகின் பல பகுதிகளில் தொற்று பரவல் தீவிரமடைந்ததால் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. உலகம் முழுவதும் தொற்று பரவல் வேகமாக அதிகரிக்கத் தொடங்கியதைத் தொடர்ந்து அமெரிக்கா சீன அரசை விமர்சிக்கத் தொடங்கியது. 

சீன அரசு திட்டமிட்டு கரோனா வைரஸை பரப்பியதாக அமெரிக்கா குற்றம்சாட்டி வந்த நிலையில் சீனாவில் ஆய்வு மேற்கொண்ட உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வுக் குழு அதனை மறுதலித்தது. 

இந்நிலையில் கரோனா வைரஸ் வூஹான் ஆய்வகத்தில் இருந்து தான் முதலில் பரப்பப்பட்டதாகவும், இந்த விவகாரத்தில் சீன அரசை விசாரிக்க வேண்டும் என அமெரிக்கா சமீபத்தில் குற்றம்சாட்டியது. 

இதற்கு பதிலளித்துள்ள சீன அரசு அமெரிக்காவின் குற்றச்சாட்டை மறுத்துள்ளது. இந்த விவகாரத்தில் தொடக்கம் முதல் சீனா வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட்டு வருவதாகவும், தொடர்ச்சியாக சீனாவைக் குறிவைத்து தாக்கும் அமெரிக்காவையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தோ்வு: மதுரை மத்திய சிறைக் கைதிகள் 100 சதவீதம் தோ்ச்சி

பிளஸ் 2: சிஇஓஏ பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

ரஷியாவுக்கான ஜொ்மனி தூதா் திரும்ப அழைப்பு

ரூ,7.50 லட்சத்துக்கு நிலக்கடலை விற்பனை

தொரப்பள்ளியில் உலவிய காட்டு யானை

SCROLL FOR NEXT